இரண்டு கோடி ரூபா விவகாரம்; ஆதாரப்படுத்தியது தினக்குரல்!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டுகோடி ரூபா அபிவிருத்தி நிதி பெற்றுக்கொண்டமையை இலங்கையின் தமிழ் தேசிய பத்திரிகைகளில் ஒன்றாகிய தினக்குரல் ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தப் பத்திரிகையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசிடம் இருந்துதான் இரண்டு கோடி ரூபா விசேட நிதி எதனையும் தான் பெற்றுக்கொள்ளவில்லை என சிறீதரன் தொடர்ந்து மறுத்துவந்தார்.
நான் இரண்டு கோடி ரூபா பெற்றதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா எனவும் சிறிதரன் பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
இந்த நிதி ஒதுக்கீடு தமக்கு கிடைத்ததையும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களையும் பெரும்பாலான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் நிதியே பெறவில்லை என்றே சிறீதரன் தொடர்ந்து கூறிவந்தார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசியத் திட்டமும் கொள்கையும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக செய்தியாளர் ஒருவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் இந்த ஒதுக்கீட்டின் கீழ் நிதி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிதியை அவர் எந்தெந்த வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார் என்ற தகவலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

Reviewed by Author
on
February 03, 2018
Rating:
Reviewed by Author
on
February 03, 2018
Rating:

No comments:
Post a Comment