மன்னார் விடத்தல் தீவு 'புனித அடைக்கல அன்னை ஆலய'அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும்-(படம்)
மன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயர் வரவேற்கும் நிகழ்வும் நேற்று புதன் (2) கிழமை மாலை 5 மணியளவில் விடத்தல் தீவு பங்குத்தந்தை தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அயர் பேரருட் கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கு ரீதியாக வரவேற்கப்பட்டார்.
-மோட்டார் சைக்கில் பவனியாக மறைமாவட்ட ஆயர் விடத்தல் தீவு பங்கில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட பங்கின் பாதுகாவலியாம் புனித அடைக்கல அன்னை ஆலயம் நோக்கி அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்களினால் குறித்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டு அபிசேகம் இடம் பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரி கள்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம்,பிரதேசச் செயலாளர்கள், அதிகாரிகள் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அயர் பேரருட் கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கு ரீதியாக வரவேற்கப்பட்டார்.
-மோட்டார் சைக்கில் பவனியாக மறைமாவட்ட ஆயர் விடத்தல் தீவு பங்கில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட பங்கின் பாதுகாவலியாம் புனித அடைக்கல அன்னை ஆலயம் நோக்கி அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்களினால் குறித்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டு அபிசேகம் இடம் பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரி கள்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம்,பிரதேசச் செயலாளர்கள், அதிகாரிகள் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் விடத்தல் தீவு 'புனித அடைக்கல அன்னை ஆலய'அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும்-(படம்)
Reviewed by Author
on
May 03, 2018
Rating:
No comments:
Post a Comment