மன்னாரில் அதீத காற்று காரணமாக புழுதி புயல் மக்கள் சிரமம்
மன்னார் மவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீசிக் கொண்டிருக்கும் அதீத காற்றின் காரணமாக பாரிய அளவில் மண்கள் மற்றும் தூசுகள் வாரி அள்ளப்பட்டு புழுதி புயலாக வீசி வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடல் மற்றும் காற்றின் வேகம் கடந்த சில மாதங்கலாக அதிகமாக இருப்பதனால் தென் பகுதி கடலானத அலையின் வேகம் காரணமாக பாரிய அளவில் அரிக்கப்பட்டு வருகின்றது.
மறு பக்கம் காற்றின் வேகம் காரணமாக கடல் ஓரப்பகுதிகளில் உள்ள மண்கள் பாரிய அளவு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் தூக்கி எறியப்படுகின்றது மன்னார் மாவட்டம் முழுதும் புழுதி புயலின் தாக்கம் காணப்பட்டாலும் மக்கள் அதிகமாக வாழும் சில கரையோர பகுதிகளான சாந்திபுரம் சௌத்பார் தாழ்வுபாடு போன்ற பகுதிகளிலும் எமில்நகர் பனங்கட்டுகொட்டு ஜிம்ரோன்நகர் ஜீவபுரம் போன்ற பகுதிகளிலும் இவ் புழுதிப் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மோற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
- நிம்மதியான தூக்கமின்றியும்
- உணவு சமைத்து உண்பதிலும் முடியாமை(கல்லும் தூசியுமாய்)
குறிப்பாக மாலை நேரங்களில் புழுதி புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் வீடுகளுக்குள் தூசுக்கள் அள்ளி வீசப்படுவதன் காரணமாக வீடுகளின் கதவுகளை கூட திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் அதீத காற்று காரணமாக புழுதி புயல் மக்கள் சிரமம்
Reviewed by Author
on
June 16, 2018
Rating:

No comments:
Post a Comment