உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் பங்கெடுப்பதற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் பெங்களூர்பயணம்
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனரும் தமிழ்ப் பற்றாளரும் தமிழியல் ஆய்வாளருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் பெங்களூர் பயணமாகியுள்ளார்.
இம்மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் 13வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் பங்கெடுப்பதற்காகவே இவர் பெங்களூர் சென்றுள்ளார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் “தமிழின் தனித்துவங்கள்’ என்ற தலைப்பில் தமிழ் நேசன் அடிகளார் சிறப்புரையாற்றுகின்றார். தொடர்ந்து மாநாட்டின் இரண்டாம் நாள் நடைபெறும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுக்கூட்டத்திலும் அடிகளார் கலந்துகொள்ளவுள்ளார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்த 13வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் பங்கெடுப்பதற்காக உலகின் பல பாகங்களிலும் இருந்து பேராளர்கள்பெங்களூருக்கு வருகை தருகின்றனர். மலேசியா-சிங்கப்பூர்-அமெரிக்கா-கனடா-பிரான்ஸ்-ஜேர்மனி-டென்மார்க்-தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இம்மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் 13வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் பங்கெடுப்பதற்காகவே இவர் பெங்களூர் சென்றுள்ளார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் “தமிழின் தனித்துவங்கள்’ என்ற தலைப்பில் தமிழ் நேசன் அடிகளார் சிறப்புரையாற்றுகின்றார். தொடர்ந்து மாநாட்டின் இரண்டாம் நாள் நடைபெறும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுக்கூட்டத்திலும் அடிகளார் கலந்துகொள்ளவுள்ளார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்த 13வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் பங்கெடுப்பதற்காக உலகின் பல பாகங்களிலும் இருந்து பேராளர்கள்பெங்களூருக்கு வருகை தருகின்றனர். மலேசியா-சிங்கப்பூர்-அமெரிக்கா-கனடா-பிரான்ஸ்-ஜேர்மனி-டென்மார்க்-தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் பங்கெடுப்பதற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் பெங்களூர்பயணம்
Reviewed by Author
on
June 16, 2018
Rating:

No comments:
Post a Comment