சிலை உடைப்புக்கள் தொடர்கிறது.....மீண்டும் மாதா சிலை உடைப்பு......
மன்னார் பெரிய கரிசல் பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சுரூபம் ஆனது நேற்று வியாழக்கிழமை 14-06-2018 மாலை இனம் தெரியாத நபர்களால் கல்லால் எறியப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. மாலை குறித்த ஆலயத்திற்கு சென்ற கிராமத்தவர்கள் சுருவத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார் இது தொடர்பாக பெரிய கரிசல் பங்குத்தந்தை இ.செபமாலைக்கு அறிவிக்கப்படத்தை தொடர்ந்து 15-06-2018 காலை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பங்கு தந்தை ஆகியோர் சென்று ஆலயத்தை பார்த்தபோது சுருவம் வைக்கப்பட்டிருந்த பேளையின் கண்ணாடி கற்கள் வீசப்பட்டு உடைக்கப்பட்டிருந்தாது மேலும் குறித்த மாதா சுரூபத்தின் மீது வீசப்பட்ட கல்லும் சிறிய ரீப்பை துண்டும் ஆலயத்தின் முன் பகுதியிலே கிடந்துள்ளது.
அத்தோடு குறித்த ஆலயத்தி்ன் காணி தொடர்பாக தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிழுவையில் இருக்கும் போது அவ் காணியி்ன் கம்பிகள் வெட்டப்பட்டுள்ளதையும் மக்கள் அவதானித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக மன்னார் போலீஸ்சாரிடம் ஆலய சபையினர் முறைப்பாடு பதிவு செய்தத்துடன்
இவ்விடயம் தொடர்பாக மன்னார் ஆயரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் மன்னார் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
அத்தோடு குறித்த ஆலயத்தி்ன் காணி தொடர்பாக தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிழுவையில் இருக்கும் போது அவ் காணியி்ன் கம்பிகள் வெட்டப்பட்டுள்ளதையும் மக்கள் அவதானித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக மன்னார் போலீஸ்சாரிடம் ஆலய சபையினர் முறைப்பாடு பதிவு செய்தத்துடன்
இவ்விடயம் தொடர்பாக மன்னார் ஆயரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் மன்னார் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
சிலை உடைப்புக்கள் தொடர்கிறது.....மீண்டும் மாதா சிலை உடைப்பு......
Reviewed by Author
on
June 16, 2018
Rating:

No comments:
Post a Comment