இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
மேற்படி பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 3 இலட்சத்து 55 ஆயிரத்து 321 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
இவர்களில் 87 ஆயிரத்து 556 மாணவர்கள் தமிழ் மொழி மூல மாணவர்களும், 2 இலட்சத்து 67 ஆயிரத்து 765 சிங்கள மொழி மூல மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான, க.பொ.த உயர்தரப் பரீட்சைகள், ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன.
பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இம்முறை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 2 இலட்சத்து 44 ஆயிரத்து 146 பாடசாலை மூலமான பரீட்சாத்திகளும், 77 ஆயிரத்து 323 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இதேவேளை, பரீட்சைகளை நடத்துவதற்கென 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை பாடசாலை மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்களது சொந்த முகவரிகளுக்கும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நிமித்தம், ஜுலை 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், தனியார் வகுப்புகள் எதனையும் நடத்துவதற்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
Reviewed by Author
on
July 30, 2018
Rating:

No comments:
Post a Comment