தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த 18 நாள் குழந்தை! சென்னையில் சோக சம்பவம் -
காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த தம்பதி சத்யராஜ்-செலஸ்டின். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்த நிலையில், செலஸ்டின் மீண்டும் கர்ப்பமடைந்தார். அதனைத் தொடர்ந்து, 18 நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் தனது குழந்தைக்கு பாலூட்டினார். பின்னர் குழந்தையை அவர் தூங்க வைக்க தூக்கியபோது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டது தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக காசிமேடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த 18 நாள் குழந்தை! சென்னையில் சோக சம்பவம் -
Reviewed by Author
on
November 15, 2018
Rating:

No comments:
Post a Comment