மன்னார் பிரதேச சபை பட்ஜட் ஏக மனதாக நிறைவேற்றம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலுள்ள மன்னார் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான (2019) முதலாவது வரவு செலவுத்திட்ட அறிக்கையை தவிசாளர் சபையில் முன்வைத்தபோது இவ் சபையில் கலந்து கொண்ட இருபது உறுப்பினர்களும் இவ் வரவு செலவு திட்டத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலுள்ள மன்னார் பிரதேச சபையின் ஒன்பதாவது மாதாந்தக் கூட்டம் இதன் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை (11.12.2018) நடைபெற்றது.
இவ் அமர்வில் மன்னார் பிரதேச சபைக்கான அடுத்த ஆண்டுக்கான (2019) வரவு
செலவுத்திட்டத்தை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் சபையில் முன்வைத்தார்
இவ் சபையில் 21 உறுப்பினர்கள் இருக்கின்றபோதும் நேற்று முன்தினம்
நடைபெற்ற இவ் அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்
ரி.ஜிவானந்தம் சுகயீனம் காரணமாக இவ் சபையில் கலந்து கொள்ளவில்லை
ஏனைய இருபது அங்கத்தவர்களும் கலந்து கொண்ட இவ் அமர்வில் தவிசாளரால்வாசிக்கப்பட்ட வரவு செலவை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்பி.கதிர்காமநாதன் முன்மொழிந்தும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் அலியார் சாபீர் வழிமொழிந்து இவ் வரவு செலவு பொழிப்பை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து இவ் வரவு செலவுத்திட்ட பொழிப்பை தவிசாளர் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக சபையில் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இவ் வரவு செலவுத்திட்டத்தில் பொது நிர்வாகத்தில் மதிப்பிடப்பட்ட
வருமானமாக ரூபா 51,789,937.44 ஆகவும், மதிப்பிடப்பட்ட இதன் செலவினமாக
27,328,154 ரூபாவாகவும், சுகாதார சேவைகள் மதிப்பிடப்பட்ட வருமானமாக 5,287,190 ரூபாவாகவும், மதிப்பிடப்பட்ட செலவினமாக 20,432,463 ரூபாவாகவும்,
பௌதீக திட்டமிடல் மதிப்பிடப்பட்ட வருமானமாக 10,078,600 ரூபாவாகவும்,
மதிப்பிடப்பட்ட செலவினமாக 11,967,884 ரூபாவாகவும், தண்ணீர் சேவைகள் மதிப்பிடப்பட்ட வருமானமாக 60,000 ரூபாகவும்,
மதிப்பிடப்பட்ட செலவினமாக 175,000 ரூபாவாகவும், பொதுப்பண்பாட்டு சேவைகள் மதிப்பிடப்பட்ட வருமானமாக 1,128,100 ரூபாவும்,
மதிப்பிடப்பட்ட செலவினமாக 1,000,000 ரூபாவும், நலன்புரி சேவைகள் மதிப்பிடப்பட்ட வருமானமாக 51,900 ரூபாவும்,
மதிப்பிடப்பட்ட செலவினமாக 7,491,976 ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ் உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் 250 ரூபா 44 சதமே மேலதிக வருமானமாக மன்னார் பிரதேச சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
December 14, 2018
Rating:

No comments:
Post a Comment