மன்னாரில் சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியினரால்-பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடாத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
அபிவிருத்தி அற்ற ஆட்சியை மாற்றி பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்தக்கோரி மன்னார் மாவட்ட 'சிறிலங்கா பொது ஜன பெரமுன' கட்சியினரால் மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை 07-12-2018 காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை 07-12-2018 காலை 11 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது 'சிறிலங்கா பொது ஜன பெரமுன' கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ அவர்களை நியமிக்க வேண்டும் எனவும், சுயாதினமான பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு களைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை 07-12-2018 காலை 11 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது 'சிறிலங்கா பொது ஜன பெரமுன' கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ அவர்களை நியமிக்க வேண்டும் எனவும், சுயாதினமான பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு களைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியினரால்-பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடாத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
December 07, 2018
Rating:
Reviewed by Author
on
December 07, 2018
Rating:

No comments:
Post a Comment