மைத்திரி - ரணிலை அறையில் போட்டு பூட்டி விடுங்கள்! ஒன்று கொல்லப்படுவார்கள் இல்லை கட்டிக்கொள்வார்கள் -
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை அறை ஒன்றில் பூட்டி வைக்க வேண்டும்.
இதன் போது அவர்கள் ஒருவருக்கொருவர் கொல்லப்படுவர்கள். அப்படி இல்லையெனில் ஒருவருக்கொருவர் கட்டிக்கொள்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பிபிசி செய்தி சேவைக்கு இன்று வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இரு தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைக்காக முழு நாட்டை பாதிப்பில் தள்ளிவிடக் கூடாது. தற்போதைய பிரச்சினையை தீர்க்க பெரும்பான்மை இருக்கும் தரப்பிற்கு ஜனாதிபதி ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும்.
அவ்வாறு ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்கள் நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. சில குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்த அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்த புதிய அரசாங்கம் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
மைத்திரி - ரணிலை அறையில் போட்டு பூட்டி விடுங்கள்! ஒன்று கொல்லப்படுவார்கள் இல்லை கட்டிக்கொள்வார்கள் -
Reviewed by Author
on
December 07, 2018
Rating:
Reviewed by Author
on
December 07, 2018
Rating:


No comments:
Post a Comment