மன்னார் உதவிக்கரம் அமைப்பின் 20 ஆண்டு பூர்த்தியும் விழிப்புணர்வு பேரணியும்
மன்னார் வாழ்வுதயம்(கறிற்றாஸ்) நிறுவனத்தின் கிளை நிறுவனமான உதவிக்கரம் அமைப்பின் 20 ஆண்டுப்பூர்த்தி நிகழ்வும் விழிப்புணர்வு பேரணி நிகழ்வும் இன்றைய தினம் மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை.அன்ரன் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் கறிற்றாஸ் வாழ்வுதய பணியகத்தில் இருந்து பேரணியுடன் ஆரம்பம் ஆனது
1999 ஆண்டு மன்னார் மாவட்ட ஓய்வு நிலை ஆயர் அருட்தந்தை. இராஜப்பு ஜோசப் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உதவிக்கரம் அமைப்பானது யுத்தம் காரணமாகவும் இயற்கை உபாதை பிறவி குறைபாடு மற்றும் விபத்துக்களால் அங்கங்களை உள் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான உதவிகள் மற்றும் மாற்று அங்கங்களை வழங்கி மாற்று ஆற்றல் உடையவர்களுக்கான மீள் வாழ்க்கை வழங்கும் நிறுவனமாக செயற்படுகின்றது
குறித்த அமைப்பின் 20 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 20 வருடங்களாக உதவிக்கரம் அமைப்பினால் பயன் அடைந்த பயனாளர்களை ஒன்று திரட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் உதவிக்கரம் அமைப்பில் சக்கர நாற்காலி மதிப்பிடல் பொறுத்துதல் பிரிவு ஆரம்ப நிகழ்வும் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் விசேட அழைப்பின் பெயரில் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் திரு.C.A.மோகன்றாஸ் அவர்களும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்.A.விக்டர்சோசை அடிகளார் அவர்களும் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி K.சிவசம்பு முன்னைனாள் உதவிகர அமைப்பின் இயக்குனர்கள் (முன்னை நாள் இயக்குனர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்)உழியர்கள் மற்றும் பயனாளர்களும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட புதிய பயனாளர்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மாற்று நிலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதுவரை 7000ற்கும் மேற்பட்ட சார்ப்பு அவையங்கள் வழங்கியுள்ளதோடு 4000ற்கும் மேற்பட்ட மாற்றாற்றல் உடையோர் பதிவு பெற்றுள்ளார்கள் இவர்களுக்கான தொடர் நடவடிக்கைகள் ஆலோசனைகள் சிகிச்சைகள் செயலாற்றப்பட்டு வருகின்றது. அத்துடன் மாதம் ஒன்றிற்கு சுமார் 12 இலட்ச்சம் தேவைப்படுகின்றது.
முடியுமானவர்கள் உதவியினை வழங்கலாம்.
-வை-கஜேந்திரன்-

Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment