அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி பிரித்தானியாவில் மரணம்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது இறுதி நிகழ்வுகள் Oxford இல் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், 03.02.2019 காலை 6.00 மணிக்கு சமய கிரியைகளுடனும் காலை 8.00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகளுடனும் நடைபெறவுள்ளதாக கூறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்...

தகனக் கிரியைகள் அருகில் உள்ள Banbury - Oxford (OX16 1ST) Crematorium இல் காலை 11.00க்கு நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து மதிய உணவு ஏற்பாடுகள் வரலாற்று மையத்தின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் அளப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரன், விடுதலைப் புலிகளின் தலைவரின் பாராட்டையும், பரிசும் பெற்ற முன்னாள் தளபதி என கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி பிரித்தானியாவில் மரணம். Reviewed by Author on February 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.