மடுக் கல்வி வலயத்தில் 1ம்தவணை மாதிரி வினா பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
மடுக் கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைகளான
- அடம்பன் றோ.க.த.க பாடசாலை 169
- பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க.பாடசாலை 56
- பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலை 137
தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குமாக 362 எண்ணிக்கையான 1ம் தவணைக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய தலா 180 ரூபா பெறுமதியான யாழருவி பயிற்சிப் புத்தகங்களை மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி, தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்களினால் 01/3/2019 வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நன்கொடைக்கான வைபவ ரீதியான ஆரம்ப நிகழ்வு 01-03-2019
மன்/பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க பாடசாலையில் காலை ஒன்று கூடலின் போது கல்லூரி அதிபர் திரு.F.X.அன்ரன் சேவியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் விசேட அம்சமாக கல்லூரி அதிபர் திரு.F.X.அன்ரன் சேவியர் அவர்களின் திறமைமிக்க நிபுணத்துவமான சேவையை கௌரவித்து மன்னார் மாவட்ட யதீஸ மாணவர் தொண்டு நிறுவனத்தின் சார்பாக அதன் பணிப்பாளர் தேச கீர்த்தி, தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்களினால் பொன்னாடை அணிவித்து " வைகறை விரகன்" உதயமாகிறார் திறமைமிக்க நிபுணத்துவமான கல்விமான்) என்ற கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் இன்றைய தினமே குறிப்பிட்ட மற்றைய இரு பாடசாலைகளுக்கும் பயிற்சிப் புத்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மடுக் கல்வி வலயத்தில் 1ம்தவணை மாதிரி வினா பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
March 03, 2019
Rating:

No comments:
Post a Comment