மன்னாரில் அரச சார்பற்ற நிறுவனம் MSEDO-படையினர் திடீர் சோதனை-மனித உரிமை ஆணைக்குழு நேரடி விஜயம்-படம்
மன்னார் வயல் வீதி பகுதியில் அமைந்துள்ள மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினுள் இன்று வியாழக்கிழமை மாலை திடீர் என சோதனைக்கு என புகுந்த படையினர் குறித்த நிறுவனத்தை முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தியதுடன் அங்கு சென்றை படைத்தரப்பு அதிகாரி ஒருவர் அநாகரிகமான முறையில் செயற்பட்டடதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பாக குறித்த படைத்தரப்பு அதிகாரி அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாய் மொழி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் திடீர் என குறித்த நிறுவனத்திற்குள் புகுந்த 50 க்கும் மேற்பட்ட படையினர் குறித்த நிறுவனம் முழுவதையும் சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.
குறித்த நிறுவனமானது தொடர்சியாக வடக்கு மாகாணத்தில் காணி தொடர்பாகவும் விவசாயம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றது.
இந்த நிலையில் குறித்த பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட போதும் சோதனைக்கு வந்த அதிகாரி ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் உரையாடியதாகவும் குறித்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் ஒரு அதிகாரியினால் குறித்த நிறுவனத்தில் பொறுத்தப்பட்ட தன் இயங்கி கேமராவும் (சி.சி.ரீவி) நிறுத்தப்பட்டும் உள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த சோதனை தொடர்பாகவும் அநாகரிகமாக செயற்பட்ட அதிகாரி தொடர்பாகவும் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் குறித்த நிறுவனம் வாய் மொழி மூலமான முறைப்பாடு பதிவு செய்ததுடன் மனித உரிமை ஆணைக்குழு ஊழியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தகவல் பெற்று கொண்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
May 30, 2019
Rating:
Reviewed by Author
on
May 30, 2019
Rating:

No comments:
Post a Comment