மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு-............
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை மதியம் (1) இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதோடு,மேலும் ஒரு இளைஞன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) அரச பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவர் படு காயமடைந்திருந்தனர்.
இந்த விபத்தில் 28 மற்றும் 21 வயதான இரண்டு இளைஞர்களே படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக 21 வயதுடைய இளைஞன் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த இளைளுன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞர் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த கா.கார்லின் ஜேம்ஸ் டயஸ் (வயது-21) என தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Author
on
July 02, 2019
Rating:

No comments:
Post a Comment