மன்னார் மாவட்டதில் கடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடி மீனவர்கள் பாதிப்பு-
மன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஒழுங்கான மழை வீழ்ச்சி இன்மையால் பல லட்சம் பெறுமதியான நெல் செய்கைகள் அழிவடைந்திருந்தது இந்த நிலையில் தொடர்சியான வறண்ட கால நிலை நீடித்துவருவதால் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.
வயல் நிலங்கள் சிறு குளங்கள் என அனத்துக்கும் நீர் வழங்கும் பிரதான குளங்கள் அனைத்தும் நீர் அற்று வரண்டு காணப்படுவதால் நன்னீர் மீன்களும் இறந்த நிலையில் காணப்படுவதுடன் நன்னீர் குளங்களுக்கு குல்லா படகுகளில் பயணிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகம் நீர் கொள்ளவை கொண்ட கட்டுக்கரை ஈச்சளவாக்கை சன்னார் கூராய் பெரியமடு குளங்கள் அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் மீன்பிடியை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
அதே நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக முதலைகளும் குளங்களுக்குள்ளும் சிறிய அளவு நீர் நிலை காணப்படும் பகுதிகளுக்குள்ளும் நுழைவதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீன் பிடியை மேற்கொள்ளவேண்டிய் நிலையில் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிகளாவான் நீர் நிறைந்து காணப்படும் கட்டுகரை குளப்பகுதியில் தற்போது மாடுகள் மேய்கின்ற அளவுக்கு நீர் வற்றி போய் காணப்படுவதாகவும் நன்னீர் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் தொழிலாலர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக நீரியல் வள திணக்களம் மீன்பிடி அமைச்சு சம்மந்த பட்ட அதிகாரிகள் என பல தரப்பினரிடம் தெரிவித்துள்ள போதும் இதுவரை எந்த வித நிவாரணமோ மானியங்கலோ எங்களுக்கு வழங்கப்படவிலை எனவும் எனவே எங்கள் வாழ்வாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாய மக்களுக்கு வழங்கப்படுவது போன்று எங்களுக்கும் வறட்சி காலங்களில் எங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான தற்காலிக நிவாரண உதவிகளையாவது வழங்கி வைக்குமாறு நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by Author
on
July 29, 2019
Rating:

No comments:
Post a Comment