நானாட்டான்-அரிப்பு வீதியில் விபத்து நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் வைத்தியசாலையில் மது போதையில் இருந்ததால் பரபரப்பு-படம்
நானாட்டான் அரிப்புத்துறை வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் குறித்த மோட்டர் சைக்கில்களில் பயணித்தவர்களில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் குறித்த வைத்தியசாலையில் கடமையில் வைத்தியர் எவரும் இருக்கவில்லை. சிறிது நேரத்தில் வைத்தியசாலையில் உள்ள வைத்தியர் விடுதியில் இருந்து வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் மது போதையில் காணப்பட்டதால் பொது மக்கள் கோபமடைந்ததால் குறித்த வைத்தியசாலையில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.
பின்னர் அம்புலான்ஸ் வண்டி மூலம் விபத்திற்கு உள்ளான குறித்த இருவரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கு உள்ளானவர்களை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் போது வைத்தியர் கடமையில் இருக்காதது ஏன்? என்று மக்கள் நானாட்டான் பிரதேச சாலையின் வைத்தியரிடம் கேள்வி எழுப்பினர்.
இதன் போது பதில் வழங்கிய குறித்த வைத்தியர் 'தனது கடமை நேரம் முடிந்து விட்டது . அதான் இருக்கவில்ல' என பதில் வழங்கியதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவசர சிகிச்சைகளுக்கு செல்கின்ற போது குறித்த வைத்தியர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன் அவர்களை வினவிய போது,,,,,
நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற குறித்த வைத்தியர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
விடுமுறை நேரம் எனில் முறையாக எமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை. கடமை நேரத்தில் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். விபத்திற்கு உள்ளானவர்கள் கட்டையடம்பன் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றுபவரும், நறுவிலிக்குளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருமே விபத்திற்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
August 11, 2019
Rating:
Reviewed by Author
on
August 11, 2019
Rating:

No comments:
Post a Comment