வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை போர்க்குற்ற விசாரணையை நடாத்து,அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,
இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019ம் திகதி (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் முகமாக நாளைய 07.09.2019 தினம் காலை-9.00 மணியளவில் வவுனியா வாடிவீட்டில் பொது அமைப்புக்களின் உடனான சந்திப்பை தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளதுடன்.
இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று அனைத்து பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகளும் அழைப்புவிடுத்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவை மற்றும்
தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகள்.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை
Reviewed by Author
on
September 06, 2019
Rating:
Reviewed by Author
on
September 06, 2019
Rating:


No comments:
Post a Comment