மன்னார் மாந்தை மாதா ஆலயத்தின் பங்கு பணி மனை கதவு உடைக்கப்பட்டு திருட்டு.படங்கள்
மன்னார்-யாழ் பிரதான வீதி, மாந்தையில் அமைந்துள்ள மாந்தை மாதா ஆலயத்தின் பங்கு பணி மனையின் கதவு நேற்று திங்கட்கிழமை (30) மாலை உடைக்கப்பட்டு ஒரு தொகை பணம் இனம் தெரியாத நபர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
மாந்தை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை இல்லாத நேரத்தில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பங்கு மனைக்கு திருப்பி வந்த நிலையில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளதை அறிந்து கொண்ட பங்குத்தந்தை உடனடியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தியனார்.
-உடனடியாக அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் பொலிஸார் குறித்த ஆலய பகுதிக்கு வந்து விசாரனைகளையும், சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாந்தை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை இல்லாத நேரத்தில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பங்கு மனைக்கு திருப்பி வந்த நிலையில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளதை அறிந்து கொண்ட பங்குத்தந்தை உடனடியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தியனார்.
-உடனடியாக அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் பொலிஸார் குறித்த ஆலய பகுதிக்கு வந்து விசாரனைகளையும், சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாந்தை மாதா ஆலயத்தின் பங்கு பணி மனை கதவு உடைக்கப்பட்டு திருட்டு.படங்கள்
Reviewed by Author
on
October 01, 2019
Rating:

No comments:
Post a Comment