ஆட்சி மாற்றத்தின் எதிரொலி- மன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 12 வாக்குகளினால் தோற்கடிப்பு
மன்னார் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று வியாழக்கிழமை(21) 12 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபை 21 உறுப்பினர்களைக் கொண்டது.
ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6 உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சி ஆதரவுடன் கடந்த 10.05.2018 தொடக்கம் ஆட்சி அமைத்து தவிசாளர் சாகுல் கமில் முகமட் முஜாகிர் தலமையில் மன்னார் பிரதேச சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துத.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சபை நடவடிக்கை ஆரம்பிக்க இருந்த போதும் சுமார் 11 மணியளவிலேயே சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் முறைப்படி தவிசாளரினால் மன்னார் பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்டு ஆதரவளிக்கும் பிரேரணை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.
அதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் யூட் கொண்சாள் குலாஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கட்சி சார்பாக தன்னிச்சையாகச் செயல்படுதல், நம்பகத்தன்மையின்மை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் செயல் படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவிசாளர் மீது நம்பிக்கையில்லப் பிரேரணை ஊடாகக் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.
இதை உறுப்பினர் ஞானப்பிரகாசம் ரிச்சேட் முன்மொழிய உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் வழி மொழிந்தார்.
இதற்கு ஆதரவான உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த தவிசாளர் நீதிக்குழுவின் தீர்மானத்திற்காமைவான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய போதும் உறுப்பினர்கள் சிலர் தகுந்த காரணங்களை வெளிப்படுத்திய நிலையில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரியானதென வாதிட்ட போதும் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்று திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன் உதவித் தவிசாளர் இஸ்மாயில் முகமட் ஸ்சதீன் நடு நிலையாகச் செயல் பட்டார்.ஒரு உறுப்பினர் அமர்வுக்கு சமூகமளிக்காமலும் வரவு செலவுத் திட்டம் ஆதரவு இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோட்கடிக்கப்பட்டது.
கடந்த 07 ஆம் திகதி (07-11-2019) மன்னார் பிரதேச சபையின் 20ஆவது அமர்வின் போது குறித்த விவகாரம் முன்வைக்கப்பட்ட போது சபையில் அமளி துமளி ஏற்பட்டு தவிசாளரினால் எந்த ஒரு காரணமும் இல்லாது சபை 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இன்று இடம் பெற்ற நிலையிலே2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோட்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
November 21, 2019
Rating:

No comments:
Post a Comment