மன்னார் முசலி பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்.(படம்)
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழான முசலிப் பிரதேசபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று திங்கட்கிழமை 23/12/2019 நிறைவேற்றப்பட்டுள்ளது.
16 உறுப்பினர்களை கொண்ட முசலி பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 23/12/2019 வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
4 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 2 உறுப்பினர்களும், பொது ஜன பெரமுனவை சேர்ந்த 1 உறுப்பினரும், சுதந்திரக் கட்சியை சேர்ந்த 1 உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை சேர்ந்த 1 உறுப்பினருமாக ஐவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
எதிர்க்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவரும், பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் முசலிப்பிரதேசபையின் ஆளும்கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு பொதுஜன பெரமுனவில் தெரிவாகியிருந்த ஒரேயொரு உறுப்பினரும் சுதந்திர கட்சியில் தெரிவான ஒரேயொரு உறுப்பினரும் ஆதரவளித்திருந்தனர்.
முசலிப்பிரதேசபையின் தவிசாளர் ஹலீபத்து சுபியான் குறித்த வரவுசெலவு திட்டத்தை இன்று 23/12/2019 சமர்ப்பித்திருந்தார்.கடந்த உள்ளுராட்சி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்று முசலிப்பிரதேசபையை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
December 23, 2019
Rating:
Reviewed by Author
on
December 23, 2019
Rating:

No comments:
Post a Comment