மன்னாரில் டெங்கு நோயால் காவல்துறை அதிகாரி மரணித்துள்ளார்.
மன்னாரில் டெங்கு நோய்க்கு காவல் துறையைச் சார்ந்த ஒருவர் உள்ளாகி
மன்னார் பொது வைத்தியசாலையில் மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவது மன்னார் காவல்துறை நிலையத்தில்
கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்டவீரகொல்லாவ இடத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வயது 45) என்பவரே டெங்கு நோய்க்கு உள்ளாகி மரணித்தவராவார்.
இவர் காய்ச்சல் என தெரிவித்து கடந்த 10 ந் திகதி (10.01.2020) மன்னார்
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனளிக்காத நிலையில் ஞாயிற்றுக் கிழமை (12.01.2020) பிற்பகல் மரணத்தை தழுவிக் கொண்டார்.
இவரின் மரண விசாரனையை முசலி மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர் நசீர்
மேற்கொண்டபின் சடலத்தை அவரின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் நான்கு காவல்துறையினர் காய்ச்சல் என மன்னார் பொது
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இவர்களும் டெங்கு
நோய்க்கு உள்ளாகியுள்ளனரா என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Reviewed by Author
on
January 13, 2020
Rating:

No comments:
Post a Comment