மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் சோதனைச்சாவடியில் வைத்து வாகனத்தில் கஞ்சா பொதிகள் மீட்பு-சந்தேக நபர் கைது-
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் சோதனைச்சாவடியில் வைத்து ஒரு தொகுதி கஞ்சா பொதிகளுடன் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று (24) திங்கட்கிழமை காலை மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகேந்திரா ரக வாகனத்தின் முன் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 6 பொதிகளைக் கொண்ட 12 கிலோ 640 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
-குஞ்சுக்குளம் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடு பட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக விரைந்து செயல்பட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை மடக்கி பிடித்து சோதனைக்கு உற்படுத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதோடு,குறித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்,வாகனம்,கைது செய்யப்பட்ட நபர் மடு பொலிஸாருடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மடு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை கடத்த பயண்படுத்திய வாகனத்தையும் பார்வையிட்டார்.
-கைது செய்யப்பட்ட நபர் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படடு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.
மகேந்திரா ரக வாகனத்தின் முன் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 6 பொதிகளைக் கொண்ட 12 கிலோ 640 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
-குஞ்சுக்குளம் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடு பட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக விரைந்து செயல்பட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை மடக்கி பிடித்து சோதனைக்கு உற்படுத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதோடு,குறித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்,வாகனம்,கைது செய்யப்பட்ட நபர் மடு பொலிஸாருடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மடு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை கடத்த பயண்படுத்திய வாகனத்தையும் பார்வையிட்டார்.
-கைது செய்யப்பட்ட நபர் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படடு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் சோதனைச்சாவடியில் வைத்து வாகனத்தில் கஞ்சா பொதிகள் மீட்பு-சந்தேக நபர் கைது-
Reviewed by Author
on
February 25, 2020
Rating:
Reviewed by Author
on
February 25, 2020
Rating:

No comments:
Post a Comment