மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி திருவிழா தொடர்பாக விரிவாக ஆராய்வு-படங்கள்
மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழாவின் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.
எதிர் வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ள மஹா சிவராத்திரி திருவிழாவின் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து ,சுகாதாரம்,மின்சார வசதி,குடிநீர்,பாதுகாப்பு,உணவு , போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதே வேளை பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு அரச மற்றும் தனியார் பேரூந்து முழுமையான சேவையை வழங்குவதற்கு இரு தரப்பும் முன் வந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அதற்கு அமைவாக 50 அரச பேரூந்து மற்றும் 50 தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளது.
சுகாதாரம் மற்றும் வைத்திய சேவைக்கு 20ஆம் திகதியிலிருந்து 4 வைத்தியர்கள் சேவையில் ஈடுபட உள்ளதோடு, ஒரு அம்புலான்ஸ் வண்டி கேதீச்சரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
மேலும் ஆலய சுற்றுச் சூழலில் பொலித்தீன் மற்றும் புகைத்தல், போதைப் பொருள் பாவனைகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அவசரத் தேவைக்காக மாந்தை மற்றும் மடு பிரதேச செயலகங்களில் இருந்து பௌசர் வண்டி மூலம் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார நிகழ்வுகளும் சிறப்பு சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது.
வருகின்ற சிவராத்திரி திருவிழா சிறப்பாக அமைவதற்கு திணைக்களங்களின் அலுவலர்கள்,ஆலய பரிபாலன சபையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மக்களின் வரவை கருத்திற் கொண்டு போக்குவரத்து ஒழுங்குகள், சுகாதாரம் , தண்ணீர் பந்தல்கள் , உணவு விநியோகம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு அமைய ஆலய பரிபாலன சபை, சுகாதார பணிமனை, பிரதேச செயலகம் மற்றும் பொலிசாருடன் இணைந்து திருக்கேதீச்சர திருவிழாவிற்கு முதல் நாள் இவ்விடையம் குறித்து முன்னாயத்த செயற்பாட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் புகையிரத திணைக்களத்திடமும் விசேட சேவையை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அவர்கள் அதை செய்யும் பட்சத்தில் தெற்குப் பகுதியில் உள்ள மக்களும் இலகுவாக வந்து செல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் 300 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் நிலமையை பொறுத்து மேலதிகமாக பாதுகாப்பு தேவை எனில் இராணுவத்தினரின் உதவியும் பெறப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
இந்த வருட சிவராத்திரி தினம் மிகவும் சிறப்பாகவும் அமைதியாகவும் நடை பெறுவதற்கு பொது மக்களும் அதிகாரிகளும் பரிபூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறித் கூட்டத்தில் திருக்கேதீச்சர திருப்பணிச்சபையின் இணைச்செயலாளர் எஸ்.இராமக்கிருஸ்ணண், மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் ,மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாஹிர் , மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி எம்.திலீபன் , மின்சார சபை , சுகாதார திணைக்களம் , வீதி அபிவிருத்தி அதிகார சபை , திருக்கேதீச்சர நிர்வாகத்தினர் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 16, 2020
Rating:

No comments:
Post a Comment