ரஜினி பேசியதற்கு பிறகு ரசிகர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு,
ரஜினிகாந்த் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம். இவர் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று பல வருடங்களாக பஞ்சாயத்து நடந்துக்கொண்டே தான் வருகின்றது.
அந்த வகையில் இந்த முறை கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.
அதற்கு ஏற்றார் போல் ரஜினி சமீபத்தில் பத்திரிகையாளரை சந்தித்து கட்சி குறித்து பேசுவார் என்று நினைத்தால், கட்சி ஆரம்பித்தாலும் நான் முதலமைச்சர் போட்டியாளராக இருக்க மாட்டேன் என்றார்.
இது பல தரப்பு ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதை தொடர்ந்து லண்டன் பகுதிகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் மன்றங்களை தற்போது கலைத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ரஜினியின் அந்த முடிவு தமிழ்நாடு தாண்டி வெளிநாட்டு ரசிகர்களையும் பாதித்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
ரஜினி பேசியதற்கு பிறகு ரசிகர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு,
Reviewed by Author
on
March 15, 2020
Rating:
Reviewed by Author
on
March 15, 2020
Rating:


No comments:
Post a Comment