மன்னார் திருக்கேதீஸ்வரம் கௌரியம்பாள் பாடசாலையில் 90%ஆன மாணவர்கள் சித்தி பெற்று சாதனை!
மன்னார் மாவட்டத்தின் திருக்கோதீஸ்வரம் கௌரியம்பாள் அ.த.க.பாடசாலை மாணவர்கள் நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 90%ஆன மாணவர்கள் சித்தி பெற்று உயர்தரக் கல்வியை பெற தகுதியைப் பெற்றுள்ளனர்.
கடந்த க.பொ.த உயர் தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் வலய மட்டத்தில் முதல் நிலைப் பெறுபேற்றினைப் பெற்றதுடன், கடந்த வருட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 30%ஆக இருந்த பரீட்சை பெறுபேறானது தற்போது 90% ஆக அதிகரித்துள்ளமை இப்பாடசாலையின் வளர்ச்சியைக் காட்டுகின்றது.
இப்பாடசாலையில் முதல் நிலைப் பெறுபேறுகளாக....
1. தி.கணுசிகா – 4A, 3B, 2C
2. இ.துசாந் - A, 4B, 2C, 2S
3. தி.கவிசாந் - A, 5B, C, 2S
4. ச.சரணியா – A, B, 4C, 2S
5. அ.கௌதமன் - A, 2C, 5S
ஆகிய மாணவர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அத்துடன் 16 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி 14 மாணவர்கள் உயர்தரக் கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
இப் பெறுபேறுகளைப் பெற உதவி புரிந்த பாடசாலை அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், ஆலோசனைகள் வழங்கிய வலய, மாகாண கல்வி திணைக்களத்தினர், விசேட வகுப்புக்களை நடாத்த நிதி உதவி புரிந்த மனிதநேய அமைப்பினர் மற்றும் சிவன் அருள் இல்லத்தினர், பெற்றோர்கள் பாடசாலைச் சமூகம் பாடசாலை பழைய மாணவர்கள் ஆகிய அனைவரையும் நியூம்ன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

Reviewed by Author
on
April 28, 2020
Rating:

No comments:
Post a Comment