மன்னாரில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கு முகக்வசங்கள் வழங்கி வைப்பு.
மன்னார் மாவட்டத்தில் ஊரடங்கு காலப் பகுதியில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு கடமைகளில்; ஈடுபட்டு வரும் பாதுகப்பு தரப்பினருக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் முகக்கவசங்களை செவ்வாய்க்கிழமை 14-04-2020 வழங்கி வைத்தள்ளனர்.
-மன்னாரில் வீதிகளில் கடமையாற்றுகின்ற பொலிஸார்,இராணுவம் மற்றும் கடற்படையினர் ஆகியோருக்கு முகக் கவசங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட குடி நீர்,குளிர்பானங்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உதவியுடன் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்களால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான பாலம் மற்றும் பொலிஸ் நிலையம் உட்பட சிறிய சோதனை சாவடிகளில் கடமை புரியும் பாதுகாப்பு தரப்பினருக்கு மேற்படி முக கவசங்கள் அவர்களுக்கு தேவையான குடி நீர் மற்றும் குளிர்பனங்கள் மெசிடோ நிறுவன குழுத்தலைவர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மன்னார் நகரசபை உறுப்பினர்களான ஜான்சன் மற்றும் ஜோசப் தர்மன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் முடக்கப்பட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினருக்கும் மேற்படி முகக் கவசங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
April 15, 2020
Rating:

No comments:
Post a Comment