மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிறை மாத பசுமன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிறை மாத பசு...!!
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள முள்ளிக்கண்டல்
பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு என வழங்கப்பட்ட நிறை மாத பசு ஒன்று
திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டு பங்கிடப்பட்ட இன்று புதன் கிழமை
காலை அடம்பம் பொலிஸார் 5 நபர்களை கைது செய்துள்ளனர்.
அடம்பன்;
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச்
சென்ற பொலிஸார் திருடப்பட்ட நிறை மாத பசுவை இறைச்சிக்காக வெட்டி பங்கிட்ட
நிலையில் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.
மன்னார்
அடம்பன் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு என வழங்கப்பட பசுக்கள்
தொடர்சியாக திருடப்பட்டு வந்த நிலையில் இன்று புதன் கிழமை (17) அதிகாலை
அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட
பொலிஸார் மினுக்கன் கிராம அலுவலகர் பிரிவுக்கு உற்பட்ட முள்ளிக்கண்டல்
பகுதியில் நிறை மாத பசு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்பட்டு கொண்டிருந்த
நிலையில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட 5 நபர்கள் சம்பவ இடத்தில் வைத்து கைது
செய்யப்பட்டனர்.
கைது
செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டதோடு வெட்டப்பட்ட நிறைமாத பசுவின் இறைச்சி மற்றும் பசுவின்
வயிற்றில் இருந்த கண்று போன்றவை அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது.
திருடப்பட்டு
வெட்டப்பட்ட நிறைமாத பசு இன்னும் சில தினங்களில் கண்றை ஈனுவதற்கான
நிலையில் காணப்பட்டதோடு,சுகாதார வைத்திய அதிகாதிகளிடம் எந்த ஒரு அனுமதியும்
பெறாமல் குறித்த பசு இறைச்சிக்காக வெட்டப்படுள்ளமை தெரிய
வந்துள்ளது.மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிறை மாத பசுமன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிறை மாத பசு...!!
Reviewed by Author
on
June 17, 2020
Rating:
Reviewed by Author
on
June 17, 2020
Rating:







No comments:
Post a Comment