எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்பக்கூறிய விடயமாகும்.......
மாற்றம் வேண்டும்.மாற்றம் வந்தால் தான் தமிழ் மக்களுக்கு
தீர்வு கிடைக்கும் அல்லது நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்
கொள்ளலாம் என்று கூறிய கூட்டமைப்பு ஒரு போதும் இந்த இருபது
வருடங்களுக்குள் தங்களுக்குள் ஒரு சரியான மாற்றத்தைக் கொண்டு வந்தார்களா?
என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்
வன்னி மாவட்ட வேட்பாளருமான வைத்தியர் ஞானசீலன் குணசீலன் கேள்வி
எழுப்பியுள்ளார்.
-மன்னாரில்
உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக
சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
-அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,.
பாராளுமன்ற
தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள்
பலர் கேள்வி எழுப்புகின்றார்கள் மக்கள் தங்களைத் கேட்கின்றார்கலாம்
தமிழரசுக் கட்சி என்ன செய்தது? அல்லது கூட்டமைப்பு என்ன செய்தது? என்று
கேள்வி கேட்கின்றார்கள். நாங்கள் கேட்கின்றோம் ஏனைய கட்சிகள் குறிப்பாக
எங்களுடைய மீன் கட்சி மாற்று தலைமை என்று கூறிக்கொள்ளுபவர்கள் என்ன செய்யப்
போகிறார்கள் என்று தெளிவாக கூறவில்லை என்று.
கண்
முன்னே தெரிகிறது 20 ஆண்டுகளாக நீக்க ஒன்றுமே செய்யவில்லை என்று
தெரிகிறது.ஆகவே ஒன்றுமே செய்யாத உங்கள் இன்னொருவருக்கு வாய்ப்பு அல்லது
மாற்றத்தை கொண்டு வந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சந்தர்ப்பத்தை
வழங்க வேண்டும்.
சந்தர்ப்பமே
கொடுக்கப்படாமல் சுமார் 20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள்
மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்பக்கூறிய
விடையமாக இருக்கின்றது.
உண்மையிலே
கூட்டமைப்பு என்று ஒன்று இல்லை. கூட்டமைப்பு என்கின்ற கட்சியே இல்லை.
தமிழரசுக் கட்சி தான் இருக்கின்றது. கூட்டமைப்பு என்கின்ற காட்சியை
உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த காட்சியை பதிவு செய்வதற்காக
மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தமிழரசுக்கட்சியினால்
முறியடிக்கப்பட்டுள்ளது.
ஏன்
அந்த கட்சிக்குள் இருந்த சகோதார கட்சிகள் கூட கூட்டமைப்பு பதிய வேண்டும்
என்று சொல்லி முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை
எடுத்த முயற்சியின் கீழ் ஒரு இனக்கப்பாட்டிற்கு வந்திருந்த நிலையில் அதனை
குழப்பி அதனை பதிய விடாமல் தடுத்த பங்கு தமிழரசுக்கட்சிக்கும்,தமிழீழ
விடுதலை இயக்கத்தையுமே சாரும்.
அன்று தொடக்கமே
அவர்களிடையே கூட்டமைப்பை பதிய வேண்டும். அதற்கு பலத்தை சேர்க்க வேண்டும் ,
எல்லாக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற தன்மையே அங்கு
காணப்படவில்லை.
அந்த
ஜனநாயகம் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் இன்று எதையும்
சாதிக்காமல் மற்றவர்களிடம் வருபவர்கள் எதனை சாதிப்பார் என்று கேள்வி
கேட்கிறார்கள்.
சந்தர்ப்பத்தை அளித்து பார்க்க வேண்டும்.ஆகவே நாங்கள் இந்த முறை கேட்பது மாற்றம் ஒன்று வேண்டும்.
மக்கள்
கட்டாயமாக இன்னொரு சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். எங்களுக்கு
சாதிக்கக்கூடிய வகைகளில் அதிகாரத்தை பெற்று தர மக்கள் முன்வர வேண்டும்.
எப்பொழுதுமே
கூட்டமைப்பினர் கூறி வந்துள்ளார்கள் ஜனாதிபதியை நாங்கள் மாற்றுவோம்,
அரசாங்கத்தை மாற்றுவோம் , அரசாங்கத்தை காப்பாற்றுவோம் என எல்லாவற்றிற்கும்
மக்களிடம் கேட்டிருந்தார்கள்.
அற்கு
அமைவாக வாக்களித்து நாங்கள் ஜனாதிபதியை மாற்றி இருக்கின்றோம். அரசாங்கத்தை
மாற்றியிருக்கிறோம்,கவிழ்ந்து போன அரசாங்கத்தை தூக்கி விட்டு கூட
இருக்கின்றோம்.
மாற்றம்
வேண்டும். மாற்றம் வந்தால் தான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் அல்லது
நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறிய
கூட்டமைப்பு ஒருபோதும் இந்த இருபது வருடங்களுக்குள் தங்களுக்குள் ஒரு
சரியான மாற்றத்தைக் கொண்டு வந்ததா?
தங்களுக்குள்
உள்ள தவறுகளை கண்டு திருத்திக் கொள்ள முயற்சித்ததா? அல்லது கட்சிக்குள்
குழப்பங்களை ஏற்படுத்துகின்றவர்களை கட்சியில் இருந்து
வெளியேற்றியுள்ளதா?இலலை. தங்களுக்குள் எந்த ஒரு மாற்றத்தையும் மேற்கொள்ளாத
கூட்டமைப்பு எப்பொழுதும் வெளி இடங்களில் மாற்றங்களை கொண்டு வந்து
மக்களுக்கு சேவையாற்றும் என்று கூறிக் கொண்டு காலத்தை கடத்தி இருக்கின்றது.
காலம்
காலமாக ஆட்சியை மாற்றி ஜனாதிபதியை மாற்றி தற்பொழுது ஒரு இக்கட்டான
நிலைக்கு தமிழர்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றோம். நாங்கள் பேரம்
பேச வேண்டிய கால கட்டம் எங்களுக்கு கிடைத்தது.
முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிக்கு கீழ் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இருக்கும்
பொழுது நாங்கள் பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய எவ்வளவு சந்தர்பங்கள்
இருந்தன.
-பேரம் பேசி
பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை எல்லாம் தவறவிட்டு எங்களினுடைய
கூட்டமைப்பின் பிழையான வழி நடத்தலினால் தற்போது பேரம் பேச முடியாத
அரசாங்கத்தின் முன் முழித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
இப்பொழுது
கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அரசாங்கம் பெரும்பான்மை
பலத்தோடு அங்கே ஆட்சி பீடம் ஏறியுள்ளது. ஆகவே பேரம் பேச வேண்டிய தன்மை ,
சந்தர்ப்பத்தை கைவிட்டு அவர்களிடம் இறந்து போய் கேட்க வேண்டிய நிலைமைக்கு
கூட்டமைப்பு தற்போது மக்கள் தமிழ் மக்களை கொண்டு வந்து தள்ளி இருக்கின்றது.
ஒரு
விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 2009 ஆம் ஆண்டு விடுதலைப்
புலிகளுடைய போர் முடிவுக்கு வந்த பின்பு அந்தச் செய்தியைக் கேட்டு
மகிழ்ச்சி அடைந்தவர்கள் உள்ளுக்குள் பூராயமாக சிரித்து கொண்டவர்கள், அதை
சந்தோசமாக வரவேற்றவர்கள் யார் என்று பார்த்தால் தற்போது கூட்டமைப்பில்
இருக்கின்ற தலைவர்கள் தான்.
வெளிக்காட்டாமல் தங்களுக்குள்ளேயே மிகவும் சந்தோசமடைந்தவர்களின் பட்டியலில் கூட்டமைப்பிலிருந்து தலைவர்களைத் தான் கூற முடியும்.
ரணில்
அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த கால கட்டத்தில் இவர்களினால் பேரம் பேசி
எதனை பெற்றுக்கொடுத்தார்கள். ஆகக் குறைந்தது இந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் மீண்டும் வாழ்க்கைக்காக அவருடைய
சமூகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இந்த
ஐந்து வருட ரணிலுடன் இணைந்த அரசாங்கத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இந்த
போராளிகளுக்கான வாழ்வாதாரம் அல்லது அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை
மேம்படுத்துவதற்காக எந்த விதத்தில் இவர்கள் முயற்சி
செய்தார்கள்.பாராளுமன்றத்தில் எத்தனை தரம் பிரேரணைகளை கொண்டு வந்தார்கள்?
எத்தனை தரம் அவற்றை நிறைவேற்றுவதற்கு ரணிலுனுடைய அரசாங்கத்தை
நிர்ப்பந்தித்தார்கள் என அணைவருக்கும் தெரியும்.
ஆகவே
இவர்களுக்கு கிடைத்தது ஒன்ரே ஒன்று இந்த கம்பரலிய மட்டும். தமிழில்
கூறினால் நாய்களுக்கு போடப்பட்ட எலும்புத் துண்டு போல எங்களுடைய தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தூக்கி எறியப்பட்டது இந்த கம்பரலிய திட்டம்.
கம்பரலியவை
அவர்கள் தங்களுடைய அடுத்த தேர்தலுக்கு தான் வெற்றி அடைவதற்கான்
வாய்ப்புக்காக அவர்கள் பிரித்துக் கொடுத்தார். ஆனால் தமிழ் மக்களுடைய பூரண
அபிவிருத்திக்கு உதவ வில்லை.மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கவும்
முடியவில்லை.
ஆக மொத்தத்தில்
கூட்டமைப்பு இவ்வளவு காலமும் தேசிய பிரச்சினை தொடர்பில் எதனையும்
சாதிக்கவில்லை. மக்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் எதனையும்
சாதிக்கவில்லை.புனர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகள் சம்பந்தமாகவும் நல்ல
விடயங்களை அவர்களுக்காக பேசவும் இல்லை செய்து கொடுக்க முயற்சிக்கவும்
இல்லை என்பதே உண்மையாகும்.என அவர் மேலும் தெரிவித்தார்..
எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்பக்கூறிய விடயமாகும்.......
Reviewed by Author
on
July 07, 2020
Rating:
No comments:
Post a Comment