சைவத்தின் பெருமையை வன்னி தேர்தல் மாவட்டம் நிலை நாட்ட வேண்டும்-சிவசேனா அமைப்பின் தலைவர் மறுவன்புலவு சச்சிதானந்தன்
மன்னாரில் தமிழ் இல்லாத பெயர்கள் சில கிராமங்களுக்கு
வைக்கப்பட்டுள்ளது.தமிழ் பெயர்கள் மட்டும் இருந்த மன்னார் தற்போது பல்வேறு
நாட்டுப் பெயர்களுடன் காணப்படுகின்றது. சைவத்தின் பெருமையை வன்னி தேர்தல்
மாவட்டம் நிலை நாட்ட வேண்டும் என சிவசேனா அமைப்பின் தலைவர் மறுவன்புலவு
சச்சிதானந்தன்.
மன்னார்
தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியில் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சிவசேனா அமைப்பின்
தலைவர் மறுவன்புலவு சச்சிதானந்தன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார்
சிவ பூமி 500 ஆண்டுகளுக்கு முன் முழுமையாக சைவர்களை வாழ்ந்த பூமி.
முத்துக்குளித்தார்கள். விளை நிலங்களை வள நிலங்களாக மாற்றினார்கள்.குளங்களை
கட்டினார்கள்.நல்ல தமிழ் பெயர்களை வைத்தார்கள்.
தற்போது
மன்னாரில் தமிழ் இல்லாத பெயர்கள் சில கிராமங்களுக்கு
வைக்கப்பட்டுள்ளது.தமிழ் பெயர்கள் மட்டும் இருந்த மன்னார் தற்போது பல்வேறு
நாட்டுப் பெயர்களுடன் காணப்படுகின்றது.
இந்த மண்ணில் உள்ள சைவத்தை சிதைக்க முற்படுகின்றார்கள்.சைவத்தை சிதைக்க விடமாட்டோம் என்று வந்திருக்கின்றார் மனோ ஐங்கர சர்மா.
அவரை அச்சுரூத்தலாம் என எவராவது நினைத்தால் திருக்கேதீச்சர வளைவினை உடைத்தது போல அவறை எதுவும் செய்ய முடியாது.
நீங்கள்
திருக்கேதீஸ்வர வளைவை உடைக்கலாம். உடைப்பதற்கு துணையாக
திருக்கேதீஸ்வரத்தில் உள்ளவர்களே இருப்பார்கள். ஆனால் ஐங்கரசர்மாவை யாரும்
மிரட்டவோ உடைக்கவோ முடியாது.
அவர் சைவத்திற்காகவும், தமிழுக்காகவும் இந்த மண்ணை மாற்றிக் கொண்டே வருகின்றார். மாற்றுவார் , மாற்றத்தை தருவார்.
சுயேட்சைக்குழு
ஒன்றில் போட்டியிடும் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளர் மனோ ஐங்கர
சர்மா அவருக்கு பின்னால் சிவசேனா அமைப்பும், சிவசேனா தொண்டர்களும்,
இலங்கை முழுவதும் உள்ள சிவ சேனா தொண்டர்களும் நிற்கின்றார்கள்.அவருடைய
வெற்றி தான் சைவத்தின் வெற்றி.
அவருடைய வெற்றி தான் தமிழின் வெற்றி. அவருடைய வாழ்க்கை தமிழுக்காகவும், சைவத்துக்காகவுமே.
அவர் பல முறை மிரட்டப்பட்டார். ஆனால் அவர் ஒரு போதும் நிலை குழைய மாட்டார்.அவருடைய தலைமையை மன்னார் சைவர்கள் ஏற்க வேண்டும்.
விழிம்பு
நிலையில் உள்ள சைவர்கள் மனம் மாறி திருக்கேதீஸ்வர உடைப்பிற்கு
காரணமானவர்களை மனதில் கொள்ளுங்கள்.அதில் சைவர்களும் உள்ளனர்.சைவர்கள்
இல்லாதவர்களும் உள்ளனர்.
-ஐங்கரசர்மா
அங்கே இருந்தால் அந்த வளைவு உடைபட்டு இருக்காது.எனவே ஐங்கரச ர்மாவிற்கு
வாக்களிக்க வேண்டும்.அவருடய கட்சியில் 9 வேட்பாளர்கள் வன்னி மாவட்டம்
முழுவதும் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டம் முழுக்க ஒரு இலட்சத்து 69
ஆயிரம் சைவ வாக்குகள் உள்ளது.
சைவ
வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள். பெண்கள் பேட்டியிடுகின்றார்கள். து
சைவத்தின் பெருமையை வன்னி தேர்தல் மாவட்டம் நிலை நாட்ட வேண்டும். என்று
கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்
தேசிய சைவ மக்கள் கட்சியில் சுயேட்சைக்குழு 1 இல் போட்டியிடும்
எங்களுக்கு மூன்று விதமான உயிர் அச்சுரூத்தல்-மனோ ஐங்கர சர்மா,,
-எதிர்
வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சுயேட்சை குழு இலக்கம் 1
கோடரி சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சிஆகிய
நாங்கள் எங்களது தேர்தல் பிரச்சாரப் பணிகளை செவ்வனே தேர்தல்
விதிமுறைகளுக்கு அமைவாக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொண்டு
வருகின்றோம்.
அந்த வகையிலே
எங்களது அமோக வரவேற்பினை பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள் சில
கட்சிகள் எங்களுக்கு எதிராக சிலர் சதி வேலைகளில் ஈடுபட்டு வருவதை எங்களது
மக்கள் மூலமாக நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது.
தமிழ்
தேசிய சைவ மக்கள் கட்சி எதிர் வரும் தினங்களில் இந்த பாராளுமன்ற தேர்தலில்
இருந்து விலகுவதாகவும் ஏனைய பெரிய சில கட்சிகள் எங்களோடு இரகசிய
ஒப்பந்தங்கள் செய்து எங்களுக்கு ஆசனங்கள் வழங்குவதற்கு தயாராக
இருப்பதாகவும் எனவே இப்படிப்பட்ட இந்த கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க
வேண்டும் என்று சில விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நாங்கள் இந்த கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம் சைவ தமிழர்களின் உரிமைகளுக்காக இந்த கட்சியை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.
இந்த
கட்சியின் செயற்பாடானது எந்த தடைகள் வந்தாலும் தடைகளை நாங்கள் தகர்த்துக்
கொண்டு எங்களது மக்களின் ஜனநாயக உரிமைக்காக நாங்கள் போராடுவோம்.
இதுவரை எங்களுக்கு மூன்று விதமான உயிர் அச்சுரூத்தலும், முகவரி இடப்படாத மொட்டைக்கடிதங்களும் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மன்னார்
மாவட்டத்தில் இருந்து இந்த அரசியல் வேலையை செய்ய வேண்டாம் என்றும் இந்த
கட்சியை கலைத்து விட்டு செல்லுமாறு எங்களுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருக்கிறது.இந்த எச்சரிக்கைகளுக்கு நாங்கள் அடி பணியப்
போவதில்லை. பயப்பட போவதுமில்லை.
நாங்கள்
செய்வது மக்கள் பணி. எனவே எந்த அச்சுறுத்தல் வந்தாலும் சில வேளைகளில்
எங்களது உயிருக்கு எந்த ஆபத்து வந்தாலும் தொடர்ந்து இந்த தமிழ் தேசிய சைவ
மக்கள் கட்சி அதன் நோக்கத்தை அடையும்.
ஏனையவர்கள் அதனை நடத்திக் கொண்டு செல்வார்கள் என்பதை நான் மக்களுக்கு தெட்டத் தெளிவாக சொல்ல விரும்புகின்றேன்.
எனவே
எவரவது பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி எங்களது வாக்குகளை நாங்கள்
வீனடிக்காது தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி அதாவது சுயேட்சைக் குழு
ஒன்றிற்கு முழுமையாக வாக்களித்து எம்மை வெற்றி பெறச் செய்யுமாறு மிகவும்
அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்தார்.
சைவத்தின் பெருமையை வன்னி தேர்தல் மாவட்டம் நிலை நாட்ட வேண்டும்-சிவசேனா அமைப்பின் தலைவர் மறுவன்புலவு சச்சிதானந்தன்
Reviewed by Author
on
July 29, 2020
Rating:

No comments:
Post a Comment