கொரோனா தொற்று காரணமாக ஒரு நாளில் 1000 ற்கு மேற்ப்பட்ட உயிரிழப்புக்கள்.....
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று ஒரேநாளில் புதிதாக 65 ஆயிரத்து 22 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் புதிதாக 1089 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குறித்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் 6 இலட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Reviewed by Author
on
August 19, 2020
Rating:


No comments:
Post a Comment