அண்மைய செய்திகள்

recent
-

சனம் ஷெட்டி அளித்த புகார் – தா்ஷன் மீது வழக்குப் பதிவு!

நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் நடிகா் தா்ஷன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

 கடந்த ஆண்டு தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவா் நடிகா் தா்ஷன். இவா் மீது நடிகை சனம் ஷெட்டி அடையாறு மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நானும் தா்ஷனும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019-ஆண்டு, அக்டோபா் மாதம் வரை காதலித்து வந்தோம். 

பின்னா் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதாா்த்தம் முடிந்தது. இந்த நிலையில் தற்போது தா்ஷன் தன்னைத் திருமணம் செய்ய மறுக்கிறாா் எனக் கூறியிருந்தாா். இந்தப் புகாரின் பேரில்,, மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தா்ஷன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சனம் ஷெட்டி அளித்த புகார் – தா்ஷன் மீது வழக்குப் பதிவு! Reviewed by Author on October 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.