அண்மைய செய்திகள்

recent
-

பீ சீ ஆர் பரிசோதனை அறிக்கை மற்றும் வாகன தொற்று நீக்கிய சான்றிதல் இருந்தால் மாத்திரமே மன்னார் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்றுபரவல் காரணமாக வெளிமாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்துக்குள் வியாபார நோக்கத்துடன் உள் நுழையும் வியாபாரிகள் மற்றும் வியாபார வாகனங்கள் அனைத்தும் மன்னார் முருங்கன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் ஒரு மாத கால எல்லைக்குள் பெறப்பட்ட பீ சி ஆர் பரிசோதனை அறிக்கையுடன் வரும் போது மாத்திரமே மன்னார் மாவட்டத்துக்குள் உள் நுழைய அனுமதி வழங்கப்பட்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா தொற்று பரவல் தொடர்பான அவசர மீளாய்வு கூட்டமானது மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் குணபாலன் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தர்மராஜ் வினோதன் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் முப்படை பிரதிநிதிகள் பலரது பங்கு பற்றுதலுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

  குறித்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதே நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை தொடர்பாகவும் அவற்றை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது அத்துடன் திருமண நிகழ்வுகள் வைபவங்கள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் மதுபாண சாலைகள் மற்றும் அதிஸ்ரலாப சீட்டுக்கள் விற்பனை செய்யும் இடங்களில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

  அதே நேரத்தில் இதுவரையான காலப்பகுதியில் மன்னார் மாவட்டம் முழுவது 2405 பீ சீ ஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடல் அதில் 12 நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவற்றில் 10 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.



பீ சீ ஆர் பரிசோதனை அறிக்கை மற்றும் வாகன தொற்று நீக்கிய சான்றிதல் இருந்தால் மாத்திரமே மன்னார் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி Reviewed by Author on November 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.