அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டதில் தொடர் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.

மன்னார் மாவட்டதில் கடந்த சில தினங்களாக தொடரும் சீறற்ற கால நிலை காரணமாக மாவட்டத்தில் பல பாகங்களிலும் மழை நீர் காணப்படுவதோடு, வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களிலும் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளதால் அதிகளவான விவசயிகள் மற்றும் பொது மக்கள் பாதீக்கப்பட்டுள்ளனர். தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் விவசாய செய்கையும் அழிவடைந்துள்ளது.

 மன்னார் மாவட்ட விவசாய செய்கை அழிவு தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தரவுகளை சேகரித்து வருவதுடன் வெள்ளப்பாதீப்புக்கள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் சேல்வேரி, தச்சினா மருதமடு போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது.
              






மன்னார் மாவட்டதில் தொடர் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு. Reviewed by Author on January 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.