காணாமல்போன இளவரசி- மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ள துபாய் இளவரசியின் துயரம்
துபாய் இளவரசி கடத்தப்பட்டமை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது நண்பி தன்னை தொடர்புகொண்டு பல மாதங்களாகிவிட்டன என தெரிவிக்கின்றார்Tiina Jauhiainen
துபாயிலிருந்து தப்பிச்செல்லமுயன்றவேளை கைது செய்து தடுத்துவைக்கபட்டிருந்த இளவரசி இலத்தீபா இரகசிய தொலைபேசி மூலம் தனது நண்பியை தொடர்புகொண்டுவந்தார்.
ஆனால் திடீரென அந்த தொலைபேசி அழைப்பும் நின்றுபோய்விட்டது.
2018 பெப்ரவரியில் இலத்தீபாவை துபாயிலிருந்து அழைத்துகொண்டு வெளியேறுவதற்கான இரகசிய திட்டமொன்றை அவர்கள் ஆரம்பித்திருந்தனர்.
அவர் தான் விரும்பியபடி புதியவாழ்க்கை வாழச்செய்வதே அதன் நோக்கம்.
துபாய் ஆட்சியாளரின் 25 பிள்ளைகளில் ஒருவரே இளவரசி இலத்தீபா
துபாய் ஆட்சியாளர் தனது நகரத்தை மிகவும் அழகானதாக ஜொலிப்பதாகஇ வர்த்தகத்தி;ற்காக பலரும் தேடிச்செல்லும் நகராக பிராந்தியத்தின் விளையாட்டு மைதானமாக மாற்றியிருந்தார்.
ஆனால் பெண்களை பொறுத்தவரை சட்டங்களும் சம்பிரதாயங்களும் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பவையாக காணப்பட்டன.
எனது காரை செலுத்த அனுமதியில்லைஇ துபாயிலிருந்து வெளியே செல்வதற்கோ துபாயக்குள் நடமாடுவதற்கோ அனுமதியில்லை என அவர் தான் அங்கிருந்து தப்பமுயல்வதற்கு முன்னர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.
2000 ம் ஆண்டிற்கு பின்னர் நான் நாட்டை விட்டு வெளியேறியதில்லைஇபயணம் செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் வழமையான விடயங்களை செய்வற்கும் அனுமதிக்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொண்டேன் ஆனால் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை தற்போது நான் அங்கிருந்து வெளியேறவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
நான் எனது எதிர்காலத்தை பற்றி நம்பிக்கையோடு உள்ளேன்இகாலையில் எழுந்து நடந்து எனக்கு பிடித்தமானவற்றை செய்யும் போது நான் எப்படி உணர்வேன் என்பது எனக்கு தெரியவில்லை நான் அந்த நாளை எதிர்பர்ர்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்.
தனது கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாதகாரணத்தினாலும்இ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாலும்இஅவர் துபாயிலிருந்து வெளியேறி ஓமான் கரையோர பகுதிக்கு செல்லவேண்டியிருந்தது.
காணாமல்போன இளவரசி- மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ள துபாய் இளவரசியின் துயரம்
Reviewed by Author
on
February 17, 2021
Rating:

No comments:
Post a Comment