அண்மைய செய்திகள்

recent
-

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது

தலங்கம, கிம்புலாவல மற்றும் தலவத்துகொட ஆகிய பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களில் நாலக வன்னியாராச்சி டெரன்ஸ் தீபால் என்ற நபரொருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ´தலவதுகொட பொத்தமா´ என்ற பெயரில் பிரபலமானவர் என தெரிவிக்கப்படுகிறது. தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 140 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் 13 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 30, 34 மற்றும் 44 வயதுடைய தலவதுகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் இன்று (01) கடுவலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது Reviewed by Author on February 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.