அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வயோதிபர்கள் மற்றும் கடுமையாக நோய் தொற்றுக்குள்ளாகியிருப்போரை பாதுகாக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. பிரித்தானியா - ஸ்கொட்லாந்து மற்றும் கிழக்கு வேல்ஸில் புதன்கிழமை வரை பனி மற்றும் ஐஸ் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டது.

 நிலவும் இந்த சீரற்ற காலநிலை காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் மின்சார வெட்டு போன்றன ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டு பதிவான பனிப்புயலைப் போன்று காலநிலை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஸ்டீவன் கீட்ஸ் தெரிவித்துள்ளார்.ஸ்கெண்டினேவியா மற்றும் ரஷ்யாவின் டார்சி புயல் காரணமாக குளிர் காற்று வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்கொட்லாந்தின் பல பகுதிகளில் 50 சென்றிமீற்றர் வரை பனிப்பொழிவு அதிகத்திருந்ததை காண முடிந்தது.

 தென்கிழக்கு இங்கிலாந்தில் கடும் புயலை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காலநிலை காரணமாக அவசர பணியாளர்களுக்கு சேவைக்கு செல்ல முடியாமை மற்றும் முடிவிடங்களுக்கு செல்ல முடியாது லொறிகள் வரிசையாக நிற்பதும் வருத்தமளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு பகுதியில் இருந்து ஆர்ட்டிக் வட்டம வரை ஊடறுத்த கடும் குளிர் காற்றே இதற்கு காரணம் என இங்கிலாந்தின் பொது சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதுடன் சூடான உணவு மற்றும் பானங்களை அருந்துவதுடன் வீட்டினுள் இருக்குமாறு கோரியுள்ளனர்.

 அடுத்த 24 மணிநேரத்திற்கு மேலும் பனிக்காற்று வீசக்கூடும் என்பதால் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் பெரும்பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,திங்கள் மதியம் வரை ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-அதாவது பயண இடையூறு மற்றும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது.ஞாயிற்றுக்கிழமை கடும் பனிப்பொழிவு காரணமாக எசெக்ஸ் மற்றும் சஃபோல்கில் உள்ள கோவிட் தடுப்பூசி மையங்களை தற்காலிகமாக மூடப்பட்டது.

 மேலும் பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதிகளில் இன்று ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.கென்ட்டின் மான்ஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 14cm (5.5in) பனி பதிவாகியிருந்தது. நாட்டின் சில கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இன்று 15 செ.மீ வரை பனியைக் கொண்டுவரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Reviewed by Author on February 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.