அண்மைய செய்திகள்

recent
-

மருமகனை பொல்லால் தாக்கி கொலை செய்த மாமனார்

கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்று (15) இரவு மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்தர்க்கம் முற்றியதில் மாமனார் மருமகனை அருகில் இருந்த பொல்லால் தாக்கியுள்ளார். இதன்போது காயமடைந்த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். 

 கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் வசித்த 35 வயதான கணேசன் விஜயகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தாக்குதல் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில் நோயாளர் காவு வண்டி அங்கு வர தாமதமானதால் தாக்குதலை நடத்திய மாமா தனது முச்சக்கர வண்டி மூலம் காயமடைந்த வரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார். 

 இவ்வாறு கொண்டுச் செல்லும் போது நோயாளர் காவு வண்டி இடையில் வந்துள்ளது. அப்போது நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் காயமடைந்தவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் தாக்குதலை நடத்தியவர் சடலத்தை கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய மாமா கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதைனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மருமகனை பொல்லால் தாக்கி கொலை செய்த மாமனார் Reviewed by Author on April 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.