18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபரில் தடுப்பூசி
புத்தளம் மாவட்டத்தில் 22 மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டியில் 25 இடங்களிலும் நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 08 நிலையங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
பதுளை, மொனராகலை, காலி மாவட்டங்களில் 31 நிலையங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 98 மத்திய நிலையங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
கேகாலையில் 05 இடங்களிலும் அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் 20 நிலையங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 18 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கிடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு நிறைவு செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபரில் தடுப்பூசி
Reviewed by Author
on
August 26, 2021
Rating:
Reviewed by Author
on
August 26, 2021
Rating:


No comments:
Post a Comment