அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி அவசரகால விதிமுறைகளிற்கு ஏற்ப வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது ஏன்? ஜனாதிபதியின் பேச்சாளர் அறிக்கை

மக்கள்மயப்பட்ட அரசாங்கம் என்ற பொறுப்புணர்வுடன் நுகர்வோர் பெருமக்களைப் பாதுகாக்கும் பொருட்டே கோத்தாபய ராஜபக்ச அவசரகால விதிமுறைகளிற்கு ஏற்ப வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் அவர்இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், ஜனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கமைய. அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகளைப் போக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவதற்கு, நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். 

அரிசி, மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அவருக்கிருக்கும் அதிகாரங்களுக்கமைய, பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அவசரகால விதிமுறைகளுக்கு உட்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றை, கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று வெளியிட்டார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். மக்கள்மயப்பட்ட அரசாங்கம் என்ற பொறுப்புணர்வுடன், நுகர்வோர் பெருமக்களைப் பாதுகாக்கும் பொருட்டே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கை முறையை வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களை விநியோகித்தல், அது தொடர்பான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதோடு, அவற்றை விரிவான கண்காணிப்புக்கு உட்படுத்தும் நோக்கிலேயே, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி அவர்களினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகள், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது அவை, 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில், முழு நாடும் அறியும். நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதில், அரசாங்கம் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது. அதற்காக, 500 பில்லியன் ரூபாய்க்கும் அதிக செலவுச் சுமையைச் சுமந்து வருகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையிலேயே இவ்வனைத்து விடயங்களையும் முன்னெடுத்துக்கொண்டு, ஜனாதிபதி அவர்கள் தலைமையிலான அரசாங்கம், தற்போதைய நிலைமைக்கு அர்ப்பணிப்புகளுடன் முகங்கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. 

அதற்குத் தேவையான தீர்மானங்களை எடுக்கும் போது, எந்தத் தரப்பினருக்கும் பக்கச்சார்பாக நடந்துகொள்ள, ஜனாதிபதி அவர்கள் தயாராக இல்லை. அரிசி தொடர்பில் நிலவும் பிரச்சினையை, அனைத்துத் தரப்பினருடன் இணக்கமாகத் தீர்த்துக்கொள்ளவே, ஆரம்பம் முதல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. விவசாயி, வர்த்தகரைப் போன்றே, நுகர்வோரையும் பாதுகாக்கும் நியாயமான முறைமையொன்றையே அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது. இது தொடர்பில், அரிசி ஆலை உரிமையாளர்களுடனும், ஜனாதிபதி அவர்கள் விரிவாகக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது, இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களும்கூட, வர்த்தகர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். விவசாயிகளைப் பலப்படுத்துவதற்காக, 30, 32 ரூபாய்க்குக் காணப்பட்ட தலா ஒரு கிலோகிராம் நெல்லுக்குக் கட்டுப்பாட்டு விலையொன்றை அரசாங்கம் நியமித்தது. அதன்படி, நாட்டரிசி மற்றும் பச்சையரிசி நெல் ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாயும் சம்பா நெல் ஒரு கிலோகிராமுக்கு 52 ரூபாயும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராமுக்கு 55 ரூபாயும் என்ற அடிப்படையில், அந்தக் கட்டுப்பாட்டு விலை நியமிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு ஒருபோதும் ஈடாகாத வகையில், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 125 ரூபாய், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 150 ரூபாய் மற்றும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 225 ரூபாய் என்ற அடிப்படையில், சந்தையில் அரிசியின் விரை அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், இதனால் நுகர்வோர் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னரே, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிகபட்ச நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக, பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் முழு அதிகாரங்களுடன், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரின் நியமனம் இடம்பெற்றது. இதன்படி, சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 103 ரூபாய், நாட்டரிசி ஒரு கிலோகிரைாம் 98 ரூபாய், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 125 ரூபாய், பச்சையரிசி ஒரு கிலோகிராட் 95 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலைகள் நியமிக்கப்பட்டு, அவை வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டன

ஜனாதிபதி அவசரகால விதிமுறைகளிற்கு ஏற்ப வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது ஏன்? ஜனாதிபதியின் பேச்சாளர் அறிக்கை Reviewed by Author on September 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.