அண்மைய செய்திகள்

recent
-

பிரியந்த குமாரவின் பிரதேபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன?

பிரியந்த குமாரவின் மரணத்தி;ன் பின்னர் இடம்பெற்ற பிரதேபரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் தலைமீது பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது-அவரது உடலை தீயிட்டுக்கொழுத்துவதற்கு முன்னர் அவரது கைகால்களை முற்றாக சேதப்படுத்தியுள்ளனர். 

அவரது தலையில் பல தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன மூளைவரை அது சென்றதால் மரணம் நிகழ்ந்தது என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல் அவரது கைகால்களை முற்றாக அடித்துநொருக்கிவிட்டது என பிரதேசபரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி சாமா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

 அவரது திசுக்களில் 99 வீதமானவை எரிகாயம் மற்றும் காயங்களால் சேதமாகிவிட்டன காலின் அடிப்பகுதி தவிர உடலின் அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன என பிரதேபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியந்தவின் உடலை இலங்கை தூதரகத்திடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியந்த குமாரவின் பிரதேபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன? Reviewed by Author on December 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.