அண்மைய செய்திகள்

recent
-

கம்பளையிலும் மட்டக்களப்பிலும் எரிவாயு அடுப்பு தீப்பற்றிய சம்பவங்கள் பதிவு

கம்பளை – வெலம்பொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (08) பகல் எரிவாயு அடுப்பு தீப்பற்றியுள்ளது. எரிவாயுவுடன் தொடர்புடைய தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதால், அச்சத்தில் வீட்டிற்கு வௌியே அடுப்பை வைத்தே இவர்கள் சமைத்து வந்துள்ளளனர். இந்த நிலையில், அடுப்பு அணைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென தீ பரவியுள்ளது. 

 மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு சம்பந்தர் வீதியிலுள்ள வீடொன்றிலும் நேற்று (08) பகல் எரிவாயு அடுப்பு தீப்பற்றியுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் சமைத்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து அடுப்பிலிருந்து எரிவாயு சிலிண்டரை வீட்டின் உரிமையாளர் அகற்றியுள்ளார்.

கம்பளையிலும் மட்டக்களப்பிலும் எரிவாயு அடுப்பு தீப்பற்றிய சம்பவங்கள் பதிவு Reviewed by Author on December 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.