மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.
7 தொடக்கம் 10 ஆண்டு கற்கின்ற 12 தொடக்கம் 16 வயதுடைய மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் , இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் பைஸர் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதுவரை மன்னார் மாவட்டத்தில் 8500 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பைஸர் தடுப்பூசியை பெற்று கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.
Reviewed by Author
on
January 21, 2022
Rating:

No comments:
Post a Comment