சேதன பசளையினை பயன்படுத்தி பயிர்செய்கையில் வெற்றிகண்ட 64 ஆவது படைப்பிரிவு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 64 ஆவது படைப்பிரிவின் தலைமை வளாகத்தில் சேதனை பசளைமூலம் மரக்கறி செய்கையினை மேற்கொண்டு நல்ல விளைச்சலினை எதிர்கொண்டுள்ளதாக படைத்தரப்பு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த விவசாயிகளை அழைத்த 64 ஆவது படைத்தரப்பு சேதனை பசளையினை பயன்படுத்தி செய்கை பண்ணிய புடலங்காய்,பாகற்காள்,பயிற்றங்காய்,முருங்கை போன்ற செய்கைகளின் விளச்சலினை இன்று 23.03.2022 விவசாயிகளுக்கு காட்டி அது தொடர்பான விளக்கத்தின கொடுத்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர்,கமநல சேவை நிலைய அதிகாரி,விவசாய விரிவாக்கற்பகுதி உத்தியோகத்தர்கள் ஒட்டுசுட்டான்பிரதேசத்தினை சேர்ந்த விவசாயிகள் ஆகியோரை அழைத்த படையினர் தங்களின் சேதனை பசளை பயன்பாடு தொடர்பிலான செய்கைகளை காட்டி விளக்கமளித்துள்ளதுடன் சிறந்த அறுவடையினை தாம்பெற்றுள்ளதை விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக காட்டியுள்ளார்கள்;.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய சேதனை பசளையினை பயன்படுத்தி இவ்வாறான செய்கை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வாறு விவசாயிகள் குறிப்பாக மரக்கறி செய்கையாளர்கள் இதில் வெற்றிகாணலம் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சேதன பசளையினை பயன்படுத்தி பயிர்செய்கையில் வெற்றிகண்ட 64 ஆவது படைப்பிரிவு!
Reviewed by Author
on
March 23, 2022
Rating:
Reviewed by Author
on
March 23, 2022
Rating:





No comments:
Post a Comment