15 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் மின் துண்டிப்பு நேரம்: வெளியாகிய அறிவித்தல்
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உரிய முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இந்த நிலை உருவாகும் எனவும் எச்சரித்தார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
இதனால் 270 மெகாவோட் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினையால் மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி உரிய முகாமைத்துவம் இன்றி நீர் மின் உற்பத்தி செய்தால், நீர் மட்டம் குறைந்து தற்பொழுது உற்பத்தி செய்யும் அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்.
மின்சார உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தாமை பாரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
15 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் மின் துண்டிப்பு நேரம்: வெளியாகிய அறிவித்தல்
Reviewed by Author
on
June 29, 2022
Rating:
Reviewed by Author
on
June 29, 2022
Rating:
.jpg)

No comments:
Post a Comment