அண்மைய செய்திகள்

recent
-

பல பில்லியன்கள் சொத்துகளுக்கு வாரிசு - ரிஷி சுனாக்கின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனாக் பொறுப்பேற்றதை அடுத்து அது இந்தியாவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதற்கு சுனாக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல அவரின் மனைவி அக்க்ஷதா மூர்த்தியும் முக்கிய காரணமாகும். இந்தியாவின் பில் கேட்ஸ் என அழைக்கப்படும் பல பில்லியன்களுக்குச் சொந்தக்காரரான தொழிலதிபர் நாராயண மூர்த்தியின் மகளே அக்க்ஷதா மூர்த்தி என்பவராகும்.அவர் தந்தை நாராயண மூர்த்தியின் மொத்தச் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டொலர்களாகும்.

 மூர்த்தி இணைந்து நிறுவிய Infosys எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அவரை இந்தியாவின் ஆகப்பெரிய பணக்காரர்களில் ஒன்றாக்கியது.அக்க்ஷதா மூர்த்தி 2009இல் ரிஷி சுனாக்கைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கும் ரிஷிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். கலிபோர்னியாவின் தனியார் கல்லூரியான Claremont McKennaஇல் பொருளியலும் பிரெஞ்சு மொழியும் படித்தார்.பேஷன் கல்லூரியில் பட்டயம் பெற்றார்.Stanford பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருந்த போது அவர் ரிஷி சுனாக்கைச் சந்தித்தார்.டிலொட்டிலும் (Deloitte) யுனிலெவரிலும் (Unilever) வேலை செய்திருந்தார். பிரித்தானியாவுக்கு வெளியே சம்பாதித்த வருவாய்க்குத் மூர்த்தி வரி கட்ட வேண்டியதில்லை என்ற தகவல் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியானது.பின்னர் அவர் தமது உலகளாவிய வருமானத்திற்கு வரி கட்ட ஒப்புக்கொண்டார்.




பல பில்லியன்கள் சொத்துகளுக்கு வாரிசு - ரிஷி சுனாக்கின் மனைவி தொடர்பில் வெளியான தகவல். Reviewed by Author on October 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.