அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் உயர்ந்தது பால்மாவின் விலை !

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை மீளவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை, ஆயிரத்து 240 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக, சந்தையில் 400 கிராம் பால்மா பொதியின் விலை, ஆயிரத்து 160 ரூபாவுக்கும், ஆயிரத்து 180 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், சமூக பாதுகாப்பு வரி, 2.5 வீதத்தால் அதிகரித்தமை மற்றும் கப்பல் சேவைகளின் கட்டணம் அதிகரிப்பு என்பன காரணமாக பால்மாவின் விலை அதிகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் உயர்ந்தது பால்மாவின் விலை ! Reviewed by Author on December 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.