அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பிரமாண்டமாக நடைபெற்ற சாரணர் இயக்கத்தின் 110 வது ஆண்டு நிறைவு விழா

இலங்கையில் சாரணர் இயக்கம் தனது சேவையை ஆரம்பித்து 110 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக நேற்று வெள்ளிக்கிழமை(23) பிரம்மாண்ட விழிப்புணர்வு நடைபவனி மற்று சாரண இயக்க 110 ஆண்டு நிறைவு நிகழ்வும் மன்னார் நகரசபை மைதானத்தில் மன்னார் சாரணர் இயக்கத்தின் ஏற்பாட்டில் சாரணர் இயக்க மன்னார் மாவட்ட ஆணையாளர் .ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம்பெற்றது. 

 மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மதியம் 2 மணியளவில் ஆரம்பமான விழிப்புணர்வு நடைபவனி யில் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி வரும் போதை பொருளுக்கு எதிராக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலமாக வருகை தந்ததுடன் இன நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய பதாகைகளையும் காட்சிப்படுத்திய வாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 

 அதனை தொடர்ந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சாரணர் மாணவ மாணவிகளுக்கான தீப்பாசறை நிகழ்வும் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் இலங்கை சாரண சங்க பிரதி பிரதம ஆணையாளர் ஜனாப் M.F முஹித் ,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பரந்தாமன், மன்னார் சாரணர் இயக்க தவிசாளர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் , இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை காரியாலய உதவி ஆணையாளர் அமல்ராஜ் ,மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி அதிபர் பாலபவன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக வைத்தியர் சுதாகரன் மற்றும் ,மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ,வர்த்தகர் லீனஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 10 பாடசாலைகளைச் சேர்ந்த 400 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














மன்னாரில் பிரமாண்டமாக நடைபெற்ற சாரணர் இயக்கத்தின் 110 வது ஆண்டு நிறைவு விழா Reviewed by Author on December 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.