ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு
 இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் இடம்பெற்றது. பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான குழுவின் கூட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மா விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா
லொஸ்ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயிண்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாடினர். 
 பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர். முன்னதாக கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு
 Reviewed by Author
        on 
        
February 25, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 25, 2023
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 25, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 25, 2023
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment