மன்னார் -நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டு.
மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தி அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நேற்று சனி(10) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை(11)நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி யை முன்னெடுத்ததோடு, வைத்தியசாலையின் சுற்றுமதில்களுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தியுள்ளனர்.
நானாட்டான் பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நானாட்டான் முச்சக்கரவண்டி சங்கத்தின் நிர்வாகத்தினரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு குறித்த சமூக பணியை முன்னெடுத்துள்ளனர்.
அவர்களின் முன்மாதிரியான செயலை பாராட்டும் வகையில் பொதுமக்கள் மற்றும் சுகாதார துறையினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் செயற்பாட்டை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் பாராட்டியுள்ளார்.
மன்னார் -நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டு.
Reviewed by Author
on
June 11, 2023
Rating:
Reviewed by Author
on
June 11, 2023
Rating:
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment